Home /News /tamil-nadu /

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

இரட்டை இலை

இரட்டை இலை

ADMK : இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதிமுக முன்னாள் உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனரான பி.ஏ.ஜோசப் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனவே ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான உட்கட்சி மோதல் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்று கூறியுள்ளார்.

    Must Read : சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

    இந்த மனுவானது தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Chennai High court, EPS, OPS

    அடுத்த செய்தி