Home /News /tamil-nadu /

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனு தள்ளுபடி.. வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதிப்பு

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனு தள்ளுபடி.. வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதிப்பு

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம்

ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அத்துடன் மனுதாரருக்கு அபராதமும் விதித்தது.

    அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனரான பி.ஏ.ஜோசப், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான உட்கட்சி மோதல் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், மனுதாரர் விளம்பர நோக்கில் வழக்கு தொடுத்ததாகக் கூறி அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.

    Must Read : பண்ணைபுரம் டூ பாராளுமன்றம் - புது மெட்டு அமைக்க தயாராகும் ராகதேவன் இளையராஜா

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Chennai High court, EPS, OPS

    அடுத்த செய்தி