Home /News /tamil-nadu /

முழுமையாக குணமடைந்த பிறகும் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுக்க கோரி மனு

முழுமையாக குணமடைந்த பிறகும் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுக்க கோரி மனு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் வாடுவதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ. மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், காமராஜரிடம் நெருங்கிய பழகியவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நகர முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும், இங்கு 3000 நோயாளிகள் உள்ள நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்தாலும் இன்னும் மருத்துவமனையில் வாடுவதாக செய்தியில் தெரிவிக்கபட்டிருந்தது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

Also read... யூடியூப் பார்த்து ஏடிஎம் கொள்ளை - 15 நாட்களுக்குப் பின் சிக்கிய கொள்ளையர்கள்

எனவே தான் அளித்த மனு மீது தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kilpauk, Madras High court

அடுத்த செய்தி