கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் வரித்துறையிடம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதற்கு தடை விதிப்பதற்கு கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கியதை அடுத்து, இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதிகள்சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி,
மஹாராஷ்டிராவில் மதுபான கடைகள் அமைக்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்கி சட்டம் இயற்றியதுபோல, தமிழகத்திலும் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். காந்தியடிகளின் கொள்கையை பின்பற்றும் கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என்றால், அவற்றை துவங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கிராம சபைக்கு அதிகாரமில்லையா என கேள்வி எழுப்பினார்.
கடைகள் மூடப்பட வேண்டுமென்றாலும் அரசின் வருவாய் ஆதாரமாக இருப்பதால் முழுமையாக அரசு கைவிடாது என்றும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், கிராமசபை தீர்மானம் தொடர்பாக இதுவரை விதிகள் இல்லை என்றும், மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாணவியிடம் அமைப்புகள் வாக்குமூலம் பெற்றது தவறு..அமைச்சர் அன்பில் மகேஷ்
கடைகளை அமைப்பதில் முடிவெடுக்க கிராம சபைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால், கடைகள் துவங்குவது தொடர்பாக பரிந்துரை வழங்க பஞ்சாயத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தனர். தங்கள் கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்றும், மூட வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைக்க அதிகாரம் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கிராமங்களில் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக கலால் வரித் துறை முடிவெடுக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும் எனவும், எங்கு, எவ்வளவு தூரத்தில் கடைகள் துவங்குவது என்பது குறித்து கலால் வரித்துறை தான் தீர்மானிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: நகராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு: அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு
இதுதொடர்பாக விரைவில் விதிகள் கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, மாநில அரசின் விதிகளில் திருத்தம் கொண்டுவருவது குறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Tasmac