புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு அதிகாரிகளே உடந்தை...! சிறைக்காவலர்கள் கடிதத்தால் பரபரப்பு

புழல் சிறையில் பல லட்ச ரூபாயை லஞ்சமாக பெற்று, குற்றவாளிகளுக்கு இசக்கிராஜா சலுகைகளை வழங்குகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு அதிகாரிகளே உடந்தை...! சிறைக்காவலர்கள் கடிதத்தால் பரபரப்பு
புழல் சிறை
  • News18
  • Last Updated: February 14, 2019, 9:41 AM IST
  • Share this:
புழல் மத்திய சிறையில் குற்றவாளிகள் சகல வசதியுடன் இருப்பதாக அண்மையில் ஆதாரங்கள் வெளியான நிலையில், சிறைத் துறை அதிகாரிகளே அவர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

படுக்க பஞ்சு மெத்தை, சாப்பிட சுவையான உணவு, பொழுதுபோக்க தொலைக்காட்சி, செல்போன், அவ்வப்போது போதை பொருள். ஸ்டார் ஹோட்டல் அளவில் புழல் சிறை இருப்பதாக அண்மையில் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் இவை அனைத்தும் தொடர்ந்து நடைபெறுவதாக சிறைக் காவலர்களே புகார் கடிதம் எழுதியுள்ளனர்.

சிறைத்துறை டிஜிபி-க்கு 23 சிறைக் காவலர்கள் எழுதியுள்ள கடிதத்தில், பணம் படைத்த குற்றவாளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சிறை நிர்வாகமே ஆதரவாக செயல்பட்டதன் விளைவாக சிறை அபாய கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், சிறை அலுவலர் உதயகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் இசக்கிராஜா என்பவர் குற்றவாளிகளிடமிருந்து பல லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருவதாக சிறைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கு தலைமையிட டிஐஜி கனகராஜ் உடந்தையாக இருப்பதாகவும், இதுதொடர்பாக சென்னை சரக டிஐஜி முருகேசனிடம் புகார் கூறிய போது, இதை கண்டுகொள்ள வேண்டாம் என தங்களுக்கே அறிவுறுத்துவதாகவும் சிறைக் காவலர்கள் அந்த கடிதத்தில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளிடம் செல்போன், போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சிறை அலுவலர் உதயகுமாரிடம் கொடுத்தால், அவர் தமக்கு தெரிந்த குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் மாறாக சிறையில் அதிகாரிகளின் அத்துமீறலை தட்டிக் கேட்கும் வகையில் செயல்படும் சிறைக் காவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி பணியிடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சிறைக் காவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக தங்களிடம் ரகசிய விசாரணை நடத்தினால் அனைத்து ஆதாரங்களையும் தருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சிறைக் காவலர்கள் விஜிலென்ஸ் டிஎஸ்பி ஜீவானந்தம், தலைமையிட டிஐஜி கனகராஜூவின் உறவினர் என்பதால் அவரை இதுகுறித்து விசாரிக்க வேண்டாம் எனவும் சிறைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Also see... காலத்தின் குரல்: ஜெயலலிதா இல்லாத தேர்தல்... தனித்துப் போட்டியிட தயங்குகிறதா அதிமுக
First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்