முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''தூய்மை பணிக்காக வந்தவர்கள்'' - அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார்!

''தூய்மை பணிக்காக வந்தவர்கள்'' - அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார்!

சீமான்

சீமான்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்து பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் தலித் அமைப்பினர் எச்சரித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தங்கள் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய 10 க்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாகவும், பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை அவரது பேச்சு இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அருந்ததியினர் கூட்டமைப்பு  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஈடுபட அவருக்கு தடை விதிப்பதுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர். இதே போல் சீமான்  மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டனர்.

சீமான் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்து பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் தலித் அமைப்பினர் எச்சரித்தனர். இதே போல் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்தும் புகார் அளித்தனர்.

செய்தியாளர் : பாபு (ஈரோடு)

First published:

Tags: Erode, Erode East Constituency, SC / ST Act, Seeman