அதிமுக பொதுக்குழு கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின்சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23ஆம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதனால் இந்த கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கடந்த 7ஆம் தேதி டி.ஜி.பி. மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த மனு மீது முடிவு எதும் எடுக்காததால் மீண்டும் கடந்த 15ஆம் தேதி மனு அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த மனுவும் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் மனுவில் குறிபிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டிஜிபி, ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
Must Read : அமைதியான சூழல் இல்லை: பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடிக்கு கடிதம்
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனு வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.