நீட்டிக்கப்படுமா அத்திவரதர் தரிசனம்? உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என்று தென்னிந்திய ஹிந்து மகா சபா தெரிவித்துள்ளது.

நீட்டிக்கப்படுமா அத்திவரதர் தரிசனம்? உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அத்திவரதர்
  • News18
  • Last Updated: August 16, 2019, 3:08 PM IST
  • Share this:
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் இன்று மாலையுடன் நிறைவுபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தரிசனத்தை நீட்டிக்க கோரிய பொதுநல மனு மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த 1-ம் தேதி முதல் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

அத்திவரதர் காட்சி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றிரவு 11 மணி நிலவரப்படி, சுமார் 3 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்திருந்தனர்.


இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்,  , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும், நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அத்திவரதரை தரிசித்தனர்.

அத்திவரதர் தரிசனம், இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, விஐபி, விவிஐபிகளுக்கான தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால், விஐபி வரிசையில் மட்டும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

48 நாட்கள் கொண்ட அத்திவரதர் திருவிழா வரும் 17-ம் தேதி  நிறைவடைகிறது. ஆதனால், இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய பொது தரிசனம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதையடுத்து, நாளை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதரை இறக்கும் பணிகள் நடைபெறும்.இந்த நிலையில், அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என்று தென்னிந்திய ஹிந்து மகா சபா தெரிவித்துள்ளது. எனவே, தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று அதன் தலைவர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை..

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்