• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விஜயதசமிக்கு கோயில்களை திறக்க உத்தரவிடக் கோரி வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது!

விஜயதசமிக்கு கோயில்களை திறக்க உத்தரவிடக் கோரி வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது!

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் உத்தரவுப்படி விஜயதசமி அன்று கோயில்களை திறக்க முடியாத நிலை உள்ளது. 

  • Share this:
    விஜயதசமி நாளான அக்டோபர் 15 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் கோயில்களை திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரொனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதன்படி, கோவில்கள் வாரத்தில் 4 நாட்கள் திறந்திருக்கும் என்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழா, குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோவில்களை முழுமையாக திறக்க வேண்டும் என்றும் பாஜக மற்றும் ஒருசில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கோவையை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,  நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 15ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது.

    ஆனால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் உத்தரவுப்படி விஜயதசமி அன்று கோயில்களை திறக்க முடியாத நிலை உள்ளது.  எனவே, பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு  விஜயசதமி அன்று கோயில்களை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: