ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வன்முறை அதிகரிப்பதற்கு படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் காரணம் - நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

வன்முறை அதிகரிப்பதற்கு படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் காரணம் - நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

மாதிரி படம்

மாதிரி படம்

வன்முறை காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையை பகுத்தறிய முடியாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் வரும்போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்த வித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையை பகுத்தறிய முடியாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது "இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டது", "சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல வெறும் கலர் பவுடர் தான்" போன்ற வாசகங்களை இடம்பெற உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Also read... கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள் - 4 மாதங்களில் பதிவான 400 சைபர் கிரைம் வழக்குகள்!

புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான காட்சிகள் வரும்போது ஒளிப்பரப்படும் விழிப்புணர்வு வாசகங்களை போன்று சண்டை காட்சிகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

First published:

Tags: Cinema, Fight, Madras High court, Tamil Cinema