அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி மனு
அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி மனு
சென்னை உயர்நீதிமன்றம்
Tirupur Amaravati River: திருப்பூர் மாவட்டம் மன்னக்கடவு கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து பழனிசாமி என்பவர் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதோடு அந்த பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தனி நபரால் தண்ணீர் எடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த குமாரசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், திருப்பூர் மாவட்டம் மன்னக்கடவு கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து பழனிசாமி என்பவர் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதோடு அந்த பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு பாதிப்பு ஏற்படுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதையும், ஆக்கிரமிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு மனு குறித்து திரூப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.