Home /News /tamil-nadu /

அதிமுக தேர்தலை எதிர்த்து மீண்டும் வழக்கு!

அதிமுக தேர்தலை எதிர்த்து மீண்டும் வழக்கு!

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படவே இதுப்போன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அதிமுக உறுப்பினரான ஜெயசந்திரன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நாளை தேர்தல் என்பதால் அதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஜெயச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் பொறுப்புத் தலைமை நீதிபதி முறையீடு செய்தார்.

    Also read : ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அஞ்சலி... சமூக வலைதளத்தில் கிளம்பிய கண்டனம்

    ஆனால் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி, மனுவே தாக்கல் செய்யாத நிலையில் அதை எப்படி விசாரணைக்கு எப்படி எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மனுத்தாக்கல் செய்து, பதிவுத்துறை நடைமுறைகள் முடிந்தால் விசாரிகலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, OPS - EPS

    அடுத்த செய்தி