ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநருக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் திமுக.. கூட்டணி கட்சிகளை திரட்டி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முடிவு

ஆளுநருக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் திமுக.. கூட்டணி கட்சிகளை திரட்டி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முடிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் பங்குக்கொண்டு பேசும் ஒவ்வொரு விழாக்களிலும் அவர் பேசும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கூறப்பட்டு வருகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.

  தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ள திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர்

  அதில், சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள் மற்றும் திருக்குறள் குறித்து ஆளுநர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன என விமர்சிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆளுநர் பங்குக்கொண்டு பேசும் ஒவ்வொரு விழாக்களிலும் அவர் பேசும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன என கட்சிகள் சார்பில் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் பேசியது தமிழக அரசுக்கு முரண்பட்டு இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகின.

  இந்நிலையில் இன்று காலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் திமுக மனு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திமுகவின் பொருளாளர் டி.ஆர் பாலு, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி தரப்போகும் மனுவில் உள்ள குறிப்பாணையை படித்திவிட்டு கையெழுத்திட வருகின்ற மூன்றாம் தேதிக்குள் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

  திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குடியரசு தலைவருக்கு வழங்கவுள்ள அறிக்கையின் சாரம்சங்கள் :

  தமிழக ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்.கூட்டுறவு சட்ட திருத்தம், நீட் உள்ளிட்ட - சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 20 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் திருப்பி அனுப்பியும், கிடப்பில் போட்டும் மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளை, மாண்புகளை புண்படுத்துகிறார்.

  அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டள்ள மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என்கிறார். அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டியவர்- அதன்படி நடக்க வேண்டியவர் சனாதன தர்மம் பேசுகிறார்.மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார்.

  திருக்குறளை விமர்சிக்கிறார்.திராவிட கலாச்சாரம் மற்றும் தமிழர் பெருமைகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார். நடுநிலைமை தவறி, அரசியல் சார்ந்த- அதுவும் பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி விட்டார்.ஆகவே அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க கோரி- திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சார்பாக மனு அளிக்கப்படுகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: DMK, RN Ravi, T.r.balu