வேட்பு மனுவில் வரி பாக்கி தொடர்பான தகவலை மறைத்ததாக நத்தன் விசுவநாதன் மீது புகார்!

நத்தம் விசுவநாதன்

4.75 கோடி வருமான வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரி வழக்கு வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. இந்த தகவலை மறைத்து நத்தம் விசுவநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் விசுவநாதன், வேட்பு மனுவில் வரி பாக்கி தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக சார்பில் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் 11,900 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.  இந்நிலையில்,  வேட்பு மனுவில்  நத்தம் விஸ்வநாதன்  தகவல்களை மறைத்ததாகவும் அவர்  மீது நடவடிக்கை  எடுக்க கோரியும், திண்டுக்கலை சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், நத்தம் விஸ்வநாதன் 4.75 கோடி வருமான வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரி வழக்கு வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அதே போல், 279 கோடி ரூபாய்  வரி செலுத்தாதது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு அவரது சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரி உத்தரவு பிறப்பித்தது. இந்த அனைத்து தகவல்களை நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது? - அமைச்சர் க.பொன்முடி பதில்...


இதை சரிபார்க்காமல் தேர்தல் ஆணையம் நத்தம் விஸ்வநாதனை போட்டியிட அனுமதித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ள அவர், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்வீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும் எனவும், புகார் குறித்து சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு உரிய வாய்ப்பளித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது போன்ற புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள்  அறிவுறுத்தினர்.
Published by:Murugesh M
First published: