பிரபல ரவுடி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கும்பல் - ரவுடி தலைமறைவு 17 பேர் கைது

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவுடியின் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  பெருங்களத்தூரில் பிரபல ரவுடி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

  சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருள் நகர் பகுதியில் உள்ள காலி நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி இரவு சுமார் 12மணி அளவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஒரு கும்பல் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தது உடனே இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

  தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது, போலீசார் வருவதை பார்த்தவுடன் கொண்டாட்டத்தில் இருந்த அந்த கும்பல் அங்கிருந்து அலறியடித்து தப்பி ஓடியது.அதன்பிறகு கேக் வெட்டி கொண்டாடிய கும்பல் யார் யாரென்று போலீசார்  விசாரணையை தொடங்கினர்.

  Also Read:"நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்.." பெரம்பூரில் குடிபோதையில் கடைகளில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது

  விசாரணையில் இரும்புலியூர் யமுனை தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி உதய குமார் (வயது-28) என்பவரின் பிறந்தநாளை தான் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் என  விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே உதயகுமார் மீது பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2 கொலை வழக்கு 3 கொலை முயற்சி வழக்கு ஆள்கடத்தல் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.போலீசார் தேடுவதை அறிந்தஉதயகுமார் தலைமறைவாகியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உதயகுமாரை தேடிச்சென்ற போலீசாருக்கு ஏமாற்றம் மட்டுமே கிட்டியது மேலும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்த நிலையில் இரும்புலியூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த அஜித் (வயது-22) அருள் நகரை சேர்ந்த பிரவீன் குமார் (வயது-19) வர்கீஸ் (வயது-20) உட்பட 17 பேரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

  விசாரணையில் 2019 ஆண்டு சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம் அருகே உள்ள சதானந்தபுரம் பெட்ரோல் பங்கில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி அஜித் மற்றும் பிரவீன் குமார் என தெரியவந்தது. அதுமட்டுமின்றி வர்கீஸ் உட்பட 3,பேர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மீதமுள்ள 14 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவலர்கள் நிபந்தனை ஜாமீன் மூலம் வீட்டிற்கு அனுப்பினர்.மேலும் தப்பியோடிய பிரபல ரவுடி உதயகுமாரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் .

  செய்தியாளர்: சுரேஷ்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: