''
பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக்கொன்று தூக்கிலிட வேண்டும்'' என்று பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி வரும் குழந்தைகள் நிகழ்ச்சியில், குழந்தை ஒன்று பெரியார் வேடமிட்டு நடித்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் கடவுளை எதிர்த்தது ஏன்?, பெண் விடுதலை உள்ளிட்ட அவரது கொள்கைகள் நாடக வடிவில் எடுத்துக் கூறப்பட்டன. இவை, மக்கள் மனதில் எளிதில் பதியும்படி இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பேரூராட்சி தற்காலிக பணியாளர் வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர், பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக் கொன்று தூக்கிலிட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இதையும் படிங்க -
திமுக ஆட்சி... பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் வெங்கடேஷ் குமார் பாபு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை நேரில் அழைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க -
வெற்றியின் சூத்திரம்... செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி
வன்மத்துடன் வெங்கடேஷ் குமார் பாபு கூறிய கருத்துக்கள் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குழந்தை என்று பாராமல் அவரை அடித்துக் கொல்ல வேண்டும் கூறும் அளவுக்கு, வெங்கடேஷின் மனநிலை மாறியது சமூகத்தின் மோசமான நிலைமையை வெளிப்படுத்துகிறது. இத்தகையை வெறுப்பை ஏற்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே அமைதியான சூழல் நிலவும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.