ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூடவே இருந்து நடிகர் போண்டாமணியின் ஏடிஎம் கார்டில் ₹1 லட்சத்தை சுருட்டிய நபர்...

கூடவே இருந்து நடிகர் போண்டாமணியின் ஏடிஎம் கார்டில் ₹1 லட்சத்தை சுருட்டிய நபர்...

நடிகர் போண்டா மணி

நடிகர் போண்டா மணி

உடல் நலம் பாதிக்கப்பட்ட போண்டா மணிக்கு பல நபர்கள் உதவி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  உடல் நலம் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

  நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவு காரணமாக  ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலையில் இருந்ததால் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். போண்டா மணியின் நிலை அறிந்து பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு உதவிகள் வந்தது

  நகைச்சுவை நடிகர் போண்டாமணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று  தற்போது வீடு திரும்பியுள்ளார். அவருக்கு உதவி செய்வது போல் அவரிடம் பழகி வந்த ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் போண்டா மணி வீட்டிற்கு வந்துள்ளார்.

  போண்டா மணியின் மனைவி தேவி மருந்து வாங்கி வர ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த நபர் ஏடிஎம் கார்டு மூலம் நகைக்கடையில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு நகை வாங்கியது தெரியவந்தது.  இது குறித்து போரூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போரூர் போலீசார் ராஜேஷ் பிரித்தீவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Crime News, Police arrested, Theft