ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி! : ஈரோடு அருகே நடந்த பகீர் சம்பவம்!

சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி! : ஈரோடு அருகே நடந்த பகீர் சம்பவம்!

ATM கொள்ளை

ATM கொள்ளை

சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennimalai, India

  ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

  ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மயிலாடியில்,    தனியார் கல்லூரி முன்பு இருந்த சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

  அந்த வீடியோவில் நள்ளிரவில் மயிலாடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் மையத்தில் நுழையும் மர்ம நபர், அங்கிருந்த 3 சிசிடிவி கேமராக்களுக்கு அடுத்தடுத்து ஸ்பிரே மூலம் கருப்பு மை பூசி மறைத்து விட்டு கொள்ளை  முயற்சியில் ஈடுபடுகிறார். தொடர்ந்து இயந்திரத்தை உடைக்க முயன்றபோது, ஏடிஎம்..ல் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் கொள்ளையன்  தப்பி ஓடிய காட்சி பதிவாகியுள்ளது.

  காளான் பறிக்க சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை : அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

  இதனால் ஏடிஎம்மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு  சென்ற தகவலை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளை முயற்சி குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் : மா. பாபு, ஈரோடு

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: ATM, Crime News, Erode, Robbery