Home /News /tamil-nadu /

பஞ்சர் கடை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை... காரணம் என்ன?

பஞ்சர் கடை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை... காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட செந்தில்

கொலை செய்யப்பட்ட செந்தில்

நாகை அருகே பஞ்சர் கடை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நாகை அடுத்த மேல வாஞ்சூரில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருபவர் செந்தில். நரிமனம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வழக்கம்போல இன்று கடையை திறக்க தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

நாகூர் கங்களாஞ்சேரி சாலை பூதங்குடி ஐ.ஓ.சி அருகே வந்துகொண்டிருந்த போது முட்புதர்களில் மறைந்திருந்த மர்ம கும்பல் செந்திலின் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சரிந்த செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also read... கோவில்பட்டி சிறையில் மகன் & தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு - மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தடயங்களை கைப்பற்றி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவின்ததுடன், நாகூர் கங்களாஞ்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அருகே பட்டப்பகலில் பஞ்சர் கடை உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Nagai

அடுத்த செய்தி