ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குற்றால அருவியில் குளிக்க 9 மாதங்களுக்கு பிறகு அனுமதி

குற்றால அருவியில் குளிக்க 9 மாதங்களுக்கு பிறகு அனுமதி

குற்றால அருவி

குற்றால அருவி

குற்றால அருவியில் குளிக்க வருவோரிடம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருத்தல் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குற்றாலம் அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி தலைமையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.

  9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

  தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், தொற்று பரவல் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

  இந்நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 10 பேர், பெண்கள் பகுதியில் ஒரு நேரத்தில் 6 பேரை அனுமதிக்கப்படுகின்றனர். ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தலா 10 பேர், பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் பகுதியில் 5 பேர், பெண்கள் பகுதியில் 10 பேரை அனுமதிக்கப்படுகின்றனர்.

  Must Read : மது விலை அதிரடி குறைப்பு : தமிழகத்திற்கு வந்து வாங்குவதை தடுக்க ஆந்திர அரசு நடவடிக்கை

  மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து நிற்க வரையப்பட்ட வட்டங்களில் நின்று செல்லவேண்டும் மேலும் இங்கு வருவோர் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், அருவிப் பகுதிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருத்தல் வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Courtallam, Falls