முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தந்தை பெரியாரின் கொள்கைகளை கார்டூன் வடிவமாக மாற்ற வேண்டும்: அரசுக்கு ஆளூர் ஷாநாவாஸ் கோரிக்கை

தந்தை பெரியாரின் கொள்கைகளை கார்டூன் வடிவமாக மாற்ற வேண்டும்: அரசுக்கு ஆளூர் ஷாநாவாஸ் கோரிக்கை

பெரியார்

பெரியார்

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவோரை தடுக்க சிறப்பு சட்டம் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என ஆளுர் ஷாநவாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தந்தை பெரியாரின் கொள்கைகளை குழந்தைகளுக்கும் சென்று சேரும் வகையில் கார்டூன் வீடியோ பதிவுகளாக மாற்ற அரசு முயற்சி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் வலியுறுத்தியுள்ளார்

சட்டபேரவை கூட்டதொடரில் நிதிநிலை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தந்தை பெரியாரின் கொள்கைககள் மற்றும் சமூக நீதி கருத்துகள், வெறும் அச்சுகளாக காகிதத்தில் மட்டுமே இருக்கிறது.

திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு... மு.க. ஸ்டாலின் அதிரடி பதில்

தற்போது அதை அச்சின் மாற்றாக டிஜிட்டல் முறையில் மாற்றுகின்றனர், ஆனால் டிஜிட்டல் வளர்ச்சி பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்போன் யூடியூப் வரை வளர்ந்துள்ளது.

ஆகவே தந்தை பெரியாரின் கருத்துக்களை டிஜிட்டலில் காட்சி பதிவு வடிவமாகவும், கார்டூன் வடிவமாக மாற்றி மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் கொண்ட செல்ல அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அப்போது தான் இங்கு மத வெறுப்பு அரசியலை ஒழிக்க முடியும் என்றார்.

மேலும், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவோரை தடுக்க சிறப்பு சட்டம் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என ஆளுர் ஷாநவாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

First published:

Tags: Aloor shanawas, TN Assembly