Home /News /tamil-nadu /

அறிவுக்கு விருந்தாக இருந்த பெரியார் அகிலத்திற்கு மருந்தாக மாறி இருக்கிறார் - கி. வீரமணி

அறிவுக்கு விருந்தாக இருந்த பெரியார் அகிலத்திற்கு மருந்தாக மாறி இருக்கிறார் - கி. வீரமணி

கி.வீரமணி

கி.வீரமணி

அறிவுக்கு விருந்தாக இருந்த பெரியார் தற்போது அகிலத்திற்கு மருந்தாக மாறி இருக்கிறார் என்றும், மக்கள் நலனுக்காக போராடும் தங்கள் மீது போடப்படும் வழக்குகளை வரவேற்பதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் அடங்கிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் சோம.இளங்கோவன், ஜெயராமன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகிய மூவருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெரியார் விருது வழங்கி கவுரவித்தார்.

பின்னர், பேசிய கி.வீரமணி, பொதுவாழ்வில் கொள்கைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடும் தங்கள் மீது போடப்படும் வழக்குகளை வரவேற்பதாக தெரிவித்தார். அறிவுக்கு விருந்தாக இருந்த பெரியார் தற்போது அகிலத்திற்கு மருந்தாக மாறி இருக்கிறார் என்றும்

பெரியாரை விமர்சிப்பவர்களுக்கு அவர்கள் வழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் எனவும் சூளுரைத்தார்.

முன்னதாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பெரியாரியம், மார்க்சியம் என்பது விஞ்ஞானம் என குறிப்பிட்டு, அதை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களை சேர்ந்த மக்களும் பெரியாரைப் பற்றி அறிய அதிகம் ஆர்வம் கொண்டுள்ள இன்றைய சூழலில், இந்தியா முழுவதும் பெரியார் சிந்தனைகள் வேகமாக பரவ தொடங்கியிருப்பதாக திருமுருகன் காந்தி கூறினார்.

பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் நாகநாதன், புலவர் பா.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



 
Published by:Yuvaraj V
First published:

Tags: Periyar, பெரியார்

அடுத்த செய்தி