'அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்' - பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..

சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

'அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்' - பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 12:10 PM IST
  • Share this:
திருச்சி, இனாம்குளத்தூரில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இனாம் குளத்தூரில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை மீது நேற்றிரவு மர்மநபர்கள் காவிச்சாயாத்தை ஊற்றியுள்ளனர். செருப்பு மாலையும் போட்டுள்ளனர். இதனை அதிகாலை பார்த்த இப்பகுதி மக்கள் ராம்ஜி நகர் மற்றும் இனாம்குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பொன்மலை பகுதியிலுள்ள பெரியார் சிலைகள் மற்றும் மாவட்டத்தில் மணப்பாறை, முசிறி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ALSO READ |  ’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  

இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும் என பதிவிட்டுள்ளார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading