கிருஷ்ணகிரியிலும் மயிலாடுதுறையிலும் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைகள்..

பெரியார் சிலை

சீர்காழியில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, விபூசி பூசி, குங்குமப் பொட்டு வைத்து அவமதித்துள்ளனர்.

 • Share this:
  கடந்த மூன்று நாட்களில், இரண்டு இடங்களில் பெரியார் சிலைகள் அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. வெள்ளியன்று, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலும், ஞாயிறு அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியார் நினைவு சமத்துவபுரத்திலும், பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன.

  கிருஷ்ணகிரியில் காட்டுநாயனப்பள்ளி ஊராட்சி சமத்துவபுரத்தின் நுழைவுவாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பெரியார் சிலை மீது டயரை போட்டு அதில் பெட்ரோல் ஊற்றி சிலைக்கு தீ வைத்து அவமதிப்பு செய்ததாகவும், அவர்களை பிடிக்கும் முன்பு தப்பியதாகவும் கூறப்படுகிறது.
  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த பிறகு, அப்போது சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதைத்தொடர்ந்து போலீசார் சிலை மீது இருந்த டயர்களை அப்புறப்படுத்தி, சிலைக்கு புதிய வர்ணம் பூச நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் திராவிடர் கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அங்கு வந்து பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலைக்கு, போலீசார் மாலை அணிவித்தனர். சீர்காழியில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, விபூசி பூசி, குங்குமப் பொட்டு வைத்து அவமதித்துள்ளனர். இந்த இரு இடங்களிலும், இச்செயலில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Gunavathy
  First published: