செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை மர்ம நபர்களால் உடைப்பு!

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை மர்ம நபர்களால் உடைப்பு!
உடைக்கப்பட்ட பெரியார் சிலை
  • News18
  • Last Updated: January 24, 2020, 12:31 PM IST
  • Share this:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரியார் சிலையின் கைப்பகுதி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் பற்றி ரஜினி பேசியதை அடுத்து, தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகள் நடந்தன. ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் நிற்க, ரஜினியின் கருத்துக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நின்றன.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலை இன்று உடைக்கப்பட்டுள்ளது.


பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

1988ம் ஆண்டு கலி. பூங்குன்றன் இந்த பெரியார் சிலையை திறந்து வைத்துள்ளார்.

First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்