Home /News /tamil-nadu /

கோவையில் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாக பீப் பிரியாணி வழங்கிய பெரியார் இயக்கம்

கோவையில் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாக பீப் பிரியாணி வழங்கிய பெரியார் இயக்கம்

பீஃப் பிரியாணி வழங்கி கு.ராமகிருஷ்ணன்

பீஃப் பிரியாணி வழங்கி கு.ராமகிருஷ்ணன்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை முன்னிட்டு கோயம்புத்தூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பீப் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.

    ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுத்து பிரியாணி திருவிழாவை ரத்து செய்ததைக் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாகவும் கோவையில் பீப் பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அண்மையில் நடைபெறவிருந்த திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பியதோடு இந்த திருவிழாவில் பீப் பிரியாணி வழங்க அனுமதி அளிக்க வலியுறுத்தினர்.

    இந்தநிலையில் ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாகவும் கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் கரப்பான் பூச்சி குழுவினர் இணைந்து பீப் பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

    இந்த பீப் பிரியாணி விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு பீப் பிரியாணி, பீப் கிரேவி மற்றும் கைமா வடை ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விருந்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பீப் பிரியாணியை ருசித்து மகிழ்ந்தனர்.

    72 மணிநேரத்தில் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்' - அண்ணாமலை அறிவிப்பு

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ‘ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் விதமாகவும் இந்த விருந்து நடைபெற்று வருவதாகவும், இந்துத்துவ அமைப்புகள் கூறியதுபோல் போன்று பன்றி கறி பிரியாணி போட்டாலும் அதை சாப்பிடுவோம் எனவும் ஏற்கனவே பன்றி கறி பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றதையும் நினைவுபடுத்தினார்.

    செய்தியாளர்: ஆரோக்கிய ஜெரால்டு, கோயம்புத்தூர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Perarivalan

    அடுத்த செய்தி