Home /News /tamil-nadu /

தந்தையுடன் முரண்பாடு, காங்கிரஸிலிருந்து வெளியேற்றம் - சமரசமில்லா பெரியாரின் வாழ்க்கை

தந்தையுடன் முரண்பாடு, காங்கிரஸிலிருந்து வெளியேற்றம் - சமரசமில்லா பெரியாரின் வாழ்க்கை

பெரியார்

பெரியார்

பெண் அடிமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்ற தளங்களில் இறுதிவரை எந்த சமரசமுமில்லாமல் இயங்கினார் பெரியார்.

  பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று அறிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு சிறப்பித்துள்ளது. இந்தநாளில் பெரியாரின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து தெரிந்துகொள்வோம்.

  ஈரோடு மாவட்டத்தில் வேங்கடநாயக்கருக்கும், சின்னத்தாய்யம்மையாருக்கும் 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி மகனாகப் பிறந்தார் பெரியார். இளம் வயதிலேயே ஊர் கட்டுப்பாடுகளை மீறி பலருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்துள்ளார். பெரியாரின் சடங்கு, சம்பிராதாயங்கள் மீதான விமர்சனத்தின் காரணமாக அப்பாவுடன் முரண்பாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி காசி சென்றுவிட்டார்.

  காசிக்கு சென்ற அவருக்கு சடங்கு, சம்பிரதாயங்கள், பண்பாடு நடைமுறைகள் எல்லாம் குறிப்பிட்ட ஓர் சமுதாயத்துக்கு ஆதரவாக இருப்பதாக உணர்ந்தார். ஆன்மீகப் பூமியான காசியில்தான் அவர் முழு நாத்திகராக மாறினார். பின்னர், தமிழ்நாடு திரும்பிய அவர் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். காந்தியை தலைவராக ஏற்று காங்கிரஸில் தன்னை இணைந்துக் கொண்டார். பின்னர், காந்தியைப் பின்பற்றி கதர்ஆடையை அணியத் தொடங்கினார்.

  திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பெரியார் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. கேரளாவில் வைக்கம் எனும் ஊரில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றார் பெரியார். அதனால், அவருக்கு வைக்கம் வீரர் என்று பெயர் வழங்கப்பட்டது.

  1925-ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்காது என்று நினைத்த பெரியார் காங்கிரஸிலிருந்து விலகினார்.


  செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் சாதி பெயர் நீக்க தீர்மானத்தைக் கொண்டார். அப்போது, சவுந்தரப் பாண்டிய நாடார், ராமச்சந்திர சேர்வை உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது சாதிப் பெயரை நீக்கினர். ரஷ்யா சென்றுவந்த பெரியார் அனைவரையும் தோழர் என்று அழைக்குமாறு வலியுறுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தை கடுமையாக விமர்சித்தார். பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற புத்தகத்தை தமிழில் வெளியிட்டு சிறைசென்றவர். பெரியார் அவரது இறுதி மூச்சுவரை பெண் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். 1973-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உயிரிழந்தார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Periyar

  அடுத்த செய்தி