தந்தை பெரியார் பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் திமுக தலைவர் முக ஸ்டாலின்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

  தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

  பகுதறிவாளரான பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் அருகே அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது தந்தை பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவபடத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், பேராசிரியர் க.அன்பழகனும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

  பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் திமுக தலைவர் முக ஸ்டாலின்


  அதனைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  Published by:Vaijayanthi S
  First published: