தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி: ராமதாஸ்

ராமதாஸ்

செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    1987-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாள் தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை தொடங்கினோம். அந்த நாளில் தான் சமூக நீதிக்காக போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    Also read: தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்

    பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை செப்டம்பர் 17-ஆம் நாள் தான் சமூக நீதி நாள். 33 ஆண்டுகளாக செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் சமூக நீதி மாநாடு நடத்தினோம். கடந்த ஆண்டு அதே நாளில் தான் ’சுக்கா... மிளகா... சமூகநீதி’ நூல் வெளியிடப்பட்டது.

    தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பா.ம.க. சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: