இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருந்துவருகின்றனர். ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு ஒருமனதாக சட்டமன்றத்தில் 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசின் கருத்தைக் கோரியுள்ளார். இதற்கிடையில்,
பேரறிவாளவன் உடல்நிலையை கணக்கில் கொண்டும், அவருடைய தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் கணக்கில் கொண்டும் அவருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், பேரறிவாளனுக்கு விடுப்புகோரி அவரது
தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்தார். அதனையடுத்து, பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறை நடைமுறைகளின் படி இன்று முதல் 30 நாட்கள் பரோலில் பேரறிவாளன் வெளியில் வருவார்.
செய்தியாளர்: கண்ணியப்பன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.