முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து மே 18-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யவேண்டும் என்று அவரது அம்மா அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வந்தார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்று
காங்கிரஸ், பா.ஜ.க தவிர்த்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்திவந்தன.
தமிழக அரசும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. அதன்பலனாக பேரறிவாளன் மே 18-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருடைய விடுதலை பல்வேறு அமைப்புகளும் வெடி வெடித்து கொண்டாடினர்.
இந்தநிலையில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்த பேரறிவாளன், ‘என்னுடைய சிறைவாழ்வு குறித்த சுயசரிதை எழுதும் எண்ணம் உள்ளது. நீதிக்காக போராடும் பலருக்கும் அது பலனளிக்கும். அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவுமில்லை. சாதாரண இயல்பு வாழ்க்கை வாழவே ஆசைப்படுகிறேன்.
இயேசு பிறப்பதற்கு முன்பே ஹெல்மெட் பயன்பாடு: எந்தெந்த நாடுகளில் ஹெல்மெட் கட்டாயம் - தெரிந்து கொள்வோம்
திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அம்மாவால் கிடைத்த இரண்டாவது வாழ்க்கை இது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிறந்திருக்கிறேன். உலகம் இன்று பெரிய அளவில் மாறியிருக்கிறது. மக்களிடம் பொருளியல் ரீதியான சிந்தனை அதிகரித்துள்ளது. ஆறு பேரின் விடுதலைக்காக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.