இந்திய நீதிக்கு கருப்பு தின நாள் என சாயல்குடியில் காங்கிரஸார் வைத்துள்ள ஃபிளக்ஸ் போர்டால் பரபரப்பு நிலவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸார் ஃபிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அதில் பேரறிவாளனின் விடுதலையான நாள் இந்திய நீதிக்கு கருப்பு தின நாள் என்றும், நெஞ்சம் பொறுக்குதில்லையே தலைவா உன் இழப்பு போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் தமிழக அரசே எங்கள் கேள்வி என்னவென்றால், தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தீவிரவாதி என்றால், பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை திட்டமிட்டு படுகொலை செய்த நபர் யார்? என்ற வாசகங்கள் அடங்கிய ஃபிளக்ஸ் போர்டால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் இது போன்ற வாசகங்கள் அடங்கிய கூட்டணி கட்சியான காங்கிரசார் வைத்துள்ள ஃபிளக்ஸ் போர்டால் அப்பகுதி திமுகவினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
செய்தியாளர் : சிவகுமார் தங்கையா
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.