• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 7 பேர் விடுதலை விவகாரம்: அரசியல் தலைவர்கள் பார்வை!

7 பேர் விடுதலை விவகாரம்: அரசியல் தலைவர்கள் பார்வை!

எழுவர் விடுதலை

எழுவர் விடுதலை

7 பேர் விடுதலையை ஒரு நிபந்தனையாக விதித்து அதிமுக அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்

  • Share this:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து முடிவுசெய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை தற்போது காணலாம்

அமைச்சர் சி.வி.சண்முகம்:

இந்த சூழலில், எழுவர் விடுதலை விவகாரத்தில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

"ஆளுநர் தெரிவித்துள்ள பதில் குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்" எழுவர் விடுதலை குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் கொடுத்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து அரசு ஆலோசிக்கும் எனவும் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்:

25-ம் தேதியே ஆளுநர் அறிக்கை அனுப்பிய விவகாரம் தங்களுக்குத் தெரியாது, எழுவரையும் விடுவிக்க போதிய அழுத்தம் கொடுத்தோம்,  ஜனாதிபதி நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்:

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் தொகுதிப் பங்கீடு செய்யும் முன்பாக 7 பேர் விடுதலையை ஒரு நிபந்தனையாக விதித்து அதிமுக அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், இந்த விவகாரத்தில் நாளைக்கே குடியரசுத் தலைவரை சந்திக்க முதலமைச்சர் சென்றாலும் கூட திமுக எம்.பி.க்கள் உடன் வரத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

திருமாவளவன்:

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சீமான்:

 

பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமும் தான், எழுவர் விடுதலை தடைக்கு காரணம் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி:

அதேசமயம், அரசியல் ஆதாயத்திற்காக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கேட்பது ஏற்புடையது அல்ல, எழுவர் விடுதலையில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்யாது என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அற்புதம் அம்மாள்:

 

 

இதனிடையே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து, அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் ஆளுநர் கேலி செய்து இருப்பதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: