• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆளுநரிடம் பேசி பேரறிவாளனுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் - அற்புதம்மாள் வலியுறுத்தல்

ஆளுநரிடம் பேசி பேரறிவாளனுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் - அற்புதம்மாள் வலியுறுத்தல்

பேரறிவாளவனின் தாயார் அற்புதம்மாள்.

பேரறிவாளவனின் தாயார் அற்புதம்மாள்.

ஆளுநரிடம் பேசி பேரறிவாளனுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்று அவரின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    இன்று மாலை ராஜ்பவனில் ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளார். மேலும், இந்தச் சந்திப்பின்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்தும் வலியுறுத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அம்மா அரசு என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி ஆளுநரைச் சந்திக்கும் பொழுது அவரிடம் பேசி என்னுடைய மகனுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும் என கூறியுள்ளார்.

    அற்புதம்மாள் மேலும் கூறுகையில், என்னுடைய மகன் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால் பரோல் கேட்டு அவரை நான் இப்பொழுது பராமரித்து வருகிறேன். என்னுடைய கணவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால், என் மகனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் மேலும் வலியுறுத்தி வருகின்றேன் என்றார்.



    என்னுடைய மகன் விடுதலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வரிடம் வேண்டி கேட்டுக் கொள்வதாகக் கூறிய அவர், அதற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: