இத்தனை நாள் பொறுமையா இருந்தடா கண்ணு... கொஞ்சம் பொறு: அற்புதம்மாள் உருக்கம்!

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளரிடம் பேசிய அற்புதம்மாள் 7 பேர் விடுதலையில், மாநில உரிமையை பயன்படுத்த முடியாத ஒரு மாநிலத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பதாக கூறினார்.

Web Desk | news18
Updated: June 11, 2019, 9:23 AM IST
இத்தனை நாள் பொறுமையா இருந்தடா கண்ணு... கொஞ்சம் பொறு: அற்புதம்மாள் உருக்கம்!
அற்புதம்மாள்
Web Desk | news18
Updated: June 11, 2019, 9:23 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளரிடம் பேசிய அற்புதம்மாள், “7 பேர் விடுதலையில் மாநில உரிமையை பயன்படுத்த முடியாத ஒரு மாநிலத்தில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். 28 ஆண்டுகள் தண்டனை என்பது என் மகனுக்கு மட்டுமல்ல எங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட தண்டனை.

என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து பேரக் குழந்தைகளோடு விளையாட வேண்டும் என்பதே என் ஆசை. நேர்மையான அரசு அதிகாரியாக வரவேண்டும் என்பதே என் மகனின் ஆசையாக இருக்கிறது.

Perarivalan | பேரறிவாளன்.
பேரறிவாளன்.


எங்களை விடுதலை செய்ய முன்வராத யாரையும் திட்டக் கூடாது என்பதே பேரறிவாளன் எனக்கு சொல்லும் அறிவுரை. எங்களை வஞ்சித்தவர்கள் நல்லா இருக்கவே முடியாது. சஞ்சய் தத் விடுவிக்கப்படும் நாட்டில் என் மகன் மட்டும் என்ன பாவம் செய்தான்?  தேர்தல் முடிந்தும் 7 பேரை விடுவிக்க இந்த அரசு அமைதி காப்பது ஏன்?’’

சிறை சென்று 28 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பேரறிவாளனுக்கு அவரது தாயார் அற்புதம்மாள், “ இத்தனை நாள் பொறுமையா இருந்தடா கண்ணு... கொஞ்சம் பொறு “ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ‘‘இனி நான் அமைதியாக இருக்க முடியாது. அளவுக்கு மேல் ஏமாற்றப்பட்டுவிட்டோம், இனியும் எங்களை ஏமாத்தாதீங்க ஏங்கித் தவிக்கிறோம்’’ என்று வேதனையாக தெரிவித்தார்.
Loading...
Also see... தனித்துவம் வாய்ந்த சங்கீத வாத்தியாலயா டெல்லிக்கு மாற்ற இடைக்காலத்தடை!

Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...