பேரறிவாளன் விடுதலை - குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீர்.. வைரலாகும் வீடியோ
பேரறிவாளன் விடுதலை - குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீர்.. வைரலாகும் வீடியோ
பேரறிவாளன் வழக்கு தீர்ப்பு
31 ஆண்டுகாலம் சிறைக்குள் எப்படி கழிந்தது என்பதை யோசித்தால்தான் அந்த வலிதெரியும். இந்த நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இதேபோல், அனைத்து தலைவர்களுக்கும், குரல் கொடுத்த முகம் தெரியாத அனைவருக்கும் நன்றி என அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்ட தீர்ப்பை அவரது குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர். தனது தாயார் அற்புதம்மாளுக்கு இனிப்பு ஊட்டி பேரறிவாளன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்த பேரறிவாளன் குடும்பத்தினர் உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீரை சிந்தினார். பேரறிவாளனை அவரது சகோதரி மற்றும் அங்கிருந்தவர்க்ள் கட்டி அனைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது தாயார் அற்புதம்மாளுக்கு பேரறிவாளன் இனிப்பு ஊட்டினார்.அங்கு கூடியிருந்த பலரும் பேரறிவாளனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “ என்ன பேசுவது என்றே தெரியவில்லை. 31 ஆண்டுகால போராட்டம் அனைவருக்குமே தெரியும். எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. 31 ஆண்டுகாலம் சிறைக்குள் எப்படி கழிந்தது என்பதை யோசித்தால்தான் அந்த வலிதெரியும். இந்த நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இதேபோல், அனைத்து தலைவர்களுக்கும், குரல் கொடுத்த முகம் தெரியாத அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.