ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன்

வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன்

வைகோ. பேரறிவாளன்

வைகோ. பேரறிவாளன்

Perarivalan met Vaiko: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனது விடுதலைக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்களை பேரறிவாளன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நளினி உள்ளிட்ட ஆறு பேரும் விடுதலையாவார்கள் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனது விடுதலைக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்களை பேரறிவாளன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பேரறிவாளன் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இன்று மதிமுக பொதுசெயலாளர் வைகோவிற்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தனது தாயாருடன் பேரறிவாளன் சென்றார்.

வைகோ வருவதற்கு முன்னதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுடன் பேரறிவாளன் உரையாடினார். அப்போது, பேரறிவாளன் தான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் பொடா சட்டத்தில் சிறைக்கு வந்த வைகோ வாலிபால் விளையாடியது குறித்த நினைகளை பகிர்ந்து கொண்டார்.

அதன்பிறகு வந்த வைகோவை பேரறிவாளனும், அவரது தாயார் அற்புத்தம்மாளும் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, பேரறிவாளனிடம் இன்னும் தாடி வைத்திருப்பது ஏன் என்று வைகோ வினவினார்.

அதற்கு தற்போது இதுதான் இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் ஆக இருப்பதாக துரை வைகோவும், பேரறிவாளனும் பதிலளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நளினி உள்ளிட்ட ஆறு பேரும் விடுதலையாவார்கள் என்று கூறினார்.

Also read... பேரறிவாளனைத் தொடர்ந்து நளினி உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட வாய்ப்பு - நளினியின் சகோதரர் நம்பிக்கை

அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை அக்கட்சி தலைமையகத்தில் பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க பேரறிவாளன் பாடுபட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

First published:

Tags: Perarivalan, Vaiko