• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்கிய தமிழக அரசு..!

பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்கிய தமிழக அரசு..!

பேரறிவாளன்

பேரறிவாளன்

கடந்த ஆறு மாத காலகட்டத்தில் பேரறிவாளனுக்கு வழங்கப்படும் இரண்டாவது பரோல் இது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாத கால பரோல் வழங்கியுள்ளது தமிழக அரசு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை காலகட்டத்தில் பேரறிவாளனுக்கு வழங்கப்படும் இரண்டாவது பரோல் இது. வரும் திங்கட்கிழமை நவம்பர் 11-ம் தேதி முதல் பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் தொடங்குகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது. தற்போது தனது ஆயுட்கால தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: