• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேரறிவாளன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்

பேரறிவாளன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்

பேரறிவாளன்

பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.

  • Share this:
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.

    தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு மற்றும் அற்புதம்மாள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடிதத்தின் நகல் கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் அவரது மனுவில், “சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்நோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். அதேவேளையில் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்க்கோரிய வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    அற்புதம் அம்மாள் மற்றும் பேரறிவாளன்


    அரசியல் சாசன நீதிமன்றங்களில் இவ்வாறு இருவேறு மாறுபட்ட கருத்தை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்நோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்ற ஆளுநர் கடிதத்தின் நகலை தங்களுக்கு தர வேண்டும்” என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் ஏப்ரல் 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

    Must Read : கொரோனா பரவல்: சென்னையில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து

     

    அப்போது, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பிரதான மனுவுடன் இணைத்து ஆளுநர் கடித நகல் கோரிய அற்புதம்மாளின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: