• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

பேரறிவாளன்

பேரறிவாளன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஒரு மாத பரோல் கிடைத்துள்ள பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனது உடல்நிலை மற்றும் தனது தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி பரோல் வழங்குமாறு சிறைத் துறையிடம் பேரறிவாளன் விண்ணப்பித்திருந்தார்.

    அவரது விண்ணப்பத்தை ஆய்வு செய்த சிறைத் துறை, கடந்த 7-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. நேற்று பரோலில் அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார்.

    போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் பரோலில் ஜோலார்பேட்டைக்கு செல்ல உள்ளார். அங்கு விதிகளுக்கு அப்பாற்பட்டு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என சிறைத்துறை நிபந்தனை விதித்துள்ளது.

    பேரறிவாளனுக்கு பரோல் கிடைப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு பிறகு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: