Home /News /tamil-nadu /

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் - நீதிபதிகள்

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் - நீதிபதிகள்

பேரறிவாளன் விடுதலை விவகாரம்!

பேரறிவாளன் விடுதலை விவகாரம்!

Perarivalan Case | மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்ப அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றனர்.

    பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    சிறையில் உள்ள தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில்  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுப்பது குறித்து குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

    மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்ப அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றனர். அரசியல் சாசனத்திற்கு எதிராக நடப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும், நீதிபதிகளின் வேதபுத்தகமான அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    ஆளுநர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி வருவதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் வாதிட்டார்.அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் வழக்கறிஞர் நடராஜ்,

    இந்த வழக்கில் ஆளுநர் ஒரு வாதி அல்ல என குறிப்பிட்டார், தண்டனை பெற்ற ஒருவர் ஆளுநரை விமர்சனம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், ஒரு இந்திய குடிமகனுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாக தெரிவித்தார். குடியரசுத் தலைவரையோ ஆளுநரையோ விமர்சிக்க கூடாது என தடை போட முடியாது எனவும் கூறினார்.

    Read More : ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு சிறுமி கொடுத்த அசத்தல் பரிசு... பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?


    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரான விஷயத்தை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது என கேள்வி எழுப்பினர். ஆளுநர் எதற்காக இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என கேள்வி எழுப்பிய அவர்கள் அது தொடர்பான ஆவணங்கள் உள்ளனவா என வினவினர். மத்திய அரசு தரப்பு ஆவணங்களை சமர்பிக்காததால் அவற்றை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

    இடையில் குடியரசுத் தலைவர் முடிவு எடுத்தாலும் அது நீதிமன்றத்தின் முடிவை எந்த விதத்திலும் பாதிக்காது என தெளிவுப்படுத்திய நீதிபதிகள் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என கூறினர். வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Perarivalan

    அடுத்த செய்தி