Home /News /tamil-nadu /

முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே18ல் பேரறிவாளன் விடுதலை

முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே18ல் பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன்

பேரறிவாளன்

கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்தது. இலங்கை ராணுவத்தால் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் இந்த போரின்போது கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுப்பவித்து வந்த பேரறிவாளன் இலங்கை போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக கடைபிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய  அமர்வு இந்த வழக்கில் விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக தங்கள் கண்டனத்தை உச்ச நீதிமன்ற தெரிவித்திருந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.. சட்டப் பிரிவு 142ன் கீழ்  உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம்  விடுதலை  செய்தது. இலங்கை விவகாரம் தொடர்பாக ராஜீவ் காந்தி மீது இருந்த வெறுப்பின் காரணமாக அவரை விடுதலை புலிகள் தற்கொலைப் படை தாக்குதல் மூலம் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்தது. இலங்கை ராணுவத்தால் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் இந்த போரின்போது கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

    இதை படிக்க: பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை..வழக்கு கடந்துவந்த பாதை


    அவ்வாறு உயிரிழந்த தமிழகர்கள் நினைவாக மே18ம் தேதி  முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகவும் இனப்படுகொலை நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Mullivaikkal, Perarivalan, Rajiv Gandhi Murder case

    அடுத்த செய்தி