அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு

என்.ஆர்.தனபாலன்

மூன்று தொகுதிகளை வழங்கவும், தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கவும் கோரிக்கை

 • Share this:
  அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு சென்னை பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

  அதிமுக மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கமும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர். தனபாலனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனபாலன், “அதிமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை வழங்கவும், தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கவும் கோரியுள்ளதாக கூறினார். சென்னையில் பெரம்பூர் தொகுதியை தருவதாக அதிமுக பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

  மற்ற தொகுதிகள் குறித்து கட்சி தலைமையிடம் ஆலோசித்து, இன்று மாலை தெரிவிப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார்.

  Must Read : தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75% சொந்த மாநிலத்தவர்களுக்குத்தான்: ஹரியானா பாஜக அரசின் முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

   

  மேலும், அதிமுக கொடுக்கும் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தனபாலன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: