கோர விபத்து : ஒரே இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் பயணம்.. விபத்தில் சிக்கி 5 பேர் பலி

கோர விபத்து : ஒரே இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் பயணம்.. விபத்தில் சிக்கி 5 பேர் பலி

சாலை விபத்து

காரை வேகமாக ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

 • Share this:
  பெரம்பலூர் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் இரு சக்கரவாகனத்தில் பயணித்த 5 பேர் உயரிழந்துள்ள சோகம் சம்பவம் நடைபெற்றுள்ளது.

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் புது காலனியை சேர்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி தனம்(55),  பாண்டியன் தனது மனைவி, மகன் மற்றும் மகள் என 5 பேர் தங்களது உறவினரின் வீட்டிற்கு ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பும் போது சிறுமி ஒருவரும் அவர்களுடன் வருவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். இதனால் ஒரே இரு சக்கர வாகனத்தில் 6 பேர் பயணித்துள்ளனர்.

  அப்போது சாலையில் வேகமாக வந்த கார் மீது பைக் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். காரை வேகமாக ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரம்பலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Vijay R
  First published: