2 முறை நீட் எழுதியும் சீட் கிடைக்காததால் விரக்தி.. பெரம்பலூர் மாணவி தற்கொலை

சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், இந்தாண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்ற அவர், 2019-ம் ஆண்டு  நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். 

Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 7:53 PM IST
2 முறை நீட் எழுதியும் சீட் கிடைக்காததால் விரக்தி.. பெரம்பலூர் மாணவி தற்கொலை
மாணவி கீர்த்தனா
Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 7:53 PM IST
இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் சீட் கிடைக்காத விரக்தியில், பெரம்பலூர் மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்ற செல்வராஜ்ஜின் மகளான கீர்த்தனா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1053 மதிப்பெண்களை எடுத்தார்.

கடந்தாண்டு நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் அவர் மருத்துவப் படிப்பிற்கு செல்ல இயலவில்லை.


இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், இந்தாண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்ற அவர், 2019-ம் ஆண்டு  நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். அதனால், இந்தாண்டும் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவரது தோழி ஒருவர் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தபோதிலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைத்தது.

இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த கீர்த்தனா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தனது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Loading...

இதனையடுத்து, அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் முயற்சி செய்தபோது, அங்கு வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீர்த்தனாவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also watch: மனைவியிடம் மன்னிப்பு கேட்ட டம்மி ரவுடி..!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...