இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்

பெரம்பலூர் அருகே கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்று வருகிறார்.

இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்
ஆனந்தராஜ்
  • Share this:
பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். குரும்பலூர் அரசு கலை கல்லூரியில் சமுக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். கொரோனோ விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று யோசித்த போது, மக்களுக்கு தன்னால் முடிந்த ஆரோக்கியமான நஞ்சில்லாத உணவைக் கொடுக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு உதித்துள்ளது.

உடனடியாக தங்களது பக்கத்து வீட்டுக்காரரின் நிலத்தின் ஒரு பகுதியைப் பெற்று, அதில் பாகல், பீர்க்கு, புடல் போன்ற கொடி வகை காய்கறிகளைப் பயிரிட்டார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. பயிரிட்டு 50 நாட்களைக் கடந்த நிலையில் தற்போது 100 சதவீதம் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள் காய்த்துத் தொங்குகின்றன. இதில் ஒரளவிற்கு வருமானமும் தற்போது கிடைத்து வருகிறது.

Also read: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை: உடற்கல்வி ஆசிரியரை ஏமாற்றி ரூ.8 லட்சம் வாங்கியவர் கைது


இயற்கை முறையிலான காய்கறியாக இருந்தாலும், ரசாயணத்தைப் பயன்படுத்தி பயிரிடப்பட்ட காய்கறிகளாக இருந்தாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இதற்கென்று ஓர் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே தன்னைப் போன்றவர்கள் உற்சாகத்துடன் மேற்கொண்டு சாகுபடியில் ஈடுபட முடியும் என்று தெரிவிக்கின்றார் ஆனந்தராஜ்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading