கிணத்தை காணோம்.. வடிவேலு பாணியில் சம்பவம் - ஆட்சியரிடம் மனுக்கொடுத்த விவசாயிகள்

விவசாயிகள்

வருவாய்த்துறை ஆவனங்களில் கிணற்றை காணவில்லை என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

  • Share this:
    திரைப்பட காட்சி பாணியில் ‘கிணற்றை காணவில்லை’ என லாடபுரம் கிராம விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களுக்கு மேலப்புலியூர் வருவாய் கிராம எல்லைப்பகுதியில் சொந்தமான கிணறு மற்றும் இலவச மின் இணைப்புடன் கூடிய நஞ்சை நிலம் உள்ளது. இதில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

    Also Read:  உதயநிதியிடம் வரிசைக்கட்டி வணக்கம் வைத்த திமுக எம்.எல்.ஏக்கள் - சட்டமன்றத்தில் கவனம் ஈர்த்த காட்சி

    இந்நிலையில் பயிர் கடன் வாங்குதவற்காக வேண்டி, கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா மற்றும் அடங்கல் சான்று கேட்ட போது, அவர் புஞ்சை நிலம் என்று அடங்கல் சான்று கொடுத்தார். நாங்கள் நஞ்சை நிலத்திற்கு ஏன் புஞ்சை நிலம் என்று சான்று கொடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள வருவாய் கணக்கு பதிவேட்டில், உங்களது நிலங்கள் அனைத்தும் கிணற்று பாசனமில்லாத வானம் பார்த்த பூமியான புஞ்சை நிலங்கள் என்று உள்ளதாகவும், அதனால் அவ்வாறு சான்றிதழ் வழங்குகிறேன் என்று தெரிவித்தார்.

    Also Read: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: ரேஷன் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை - நிதியமைச்சர்

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வருவாய்த்துறை ஆவனங்களில் நஞ்சை என்றும் கிணறு உள்ளதற்கான வரைபடமும் உள்ளது என்று கூறியும் அதனை அவர் ஏற்கவில்லை. இருப்பினும் நாங்கள் அனைவரும் இலவச மின் இணைப்புடன், கிணற்று பாசனம் மூலமாக இன்றளவும் நஞ்சை சாகுபடி செய்து வருகிறோம் நேரில் வந்து கள ஆய்வு செய்யுங்கள் என்று கூறியதற்கு, அவர் கையூட்டு  கேட்டு காலம் தாழ்த்தி வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நகைச்சுவை  நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கூறியது போல கிணறு உள்ளது, ஆனால் அரசு வருவாய்த்துறை ஆவனங்களில் கிணற்றை காணவில்லை என்று கூறி, வருவாய்த்துறை ஆவனங்களில் முறையாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது போல பதிவேற்றம் செய்து தரவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தினால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
     செய்தியாளர் : ஆர்.ராஜவேல்  (பெரம்பலூர்)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: