Home /News /tamil-nadu /

நன்றி சொல்ல வந்த அமைச்சர் சிவசங்கர்... மக்கள் செய்த காரியத்தால் பரபரப்பு

நன்றி சொல்ல வந்த அமைச்சர் சிவசங்கர்... மக்கள் செய்த காரியத்தால் பரபரப்பு

அமைச்சர் சிவசங்கர் காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

அமைச்சர் சிவசங்கர் காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் நன்றி சொல்ல வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின், காரை பொதுமக்கள் மறித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,  தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு பல்வேறு இடங்களில் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட வரகுபாடி, காரை,தெரணி, சிறுகன்பூர், தெற்குமாதவி, சாத்தனூர் மற்றும் சாத்தனூர் குடிகாடு ஆகிய கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தெற்கு மாதவி கிராமத்திற்கு அமைச்சர் நன்றி சொல்ல வருவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிராம எல்லையில் மருதையாற்றின் பாலம் அருகே அமைச்சரின் காரை மறித்து முற்றுகையிட்டனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள்  குறிப்பாக பெண்கள் தங்கள் கிராமத்தின் வழியே செல்லும் மருதையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாலும், கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் ஓட முடியாமல் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பினை பாழ் செய்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

Also Read : தமிழகத்தில் புதிததாக 2093 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் ஒருவர் உயிரிழப்பு

மேலும் கிராமத்தின் வழியே காவிரி -கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் தங்களுக்கு குடிதண்ணீர் வழங்காததால் குட்டை நீரை குடிக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தெருக்களில் சாக்கடை நீர் வழிந்தொடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் ஆவேசத்துடன் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொதுக்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவரது காருக்கு பெண்கள் வழி விட்டனர் இதனை தொடர்ந்து அமைச்சர் காரின் அங்கிருந்து புறப்பட்ட சென்றது.
Published by:Vijay R
First published:

Tags: Minister Sivasankar, Perambalur

அடுத்த செய்தி