Home /News /tamil-nadu /

தெற்கு ஆசிய கபடி போட்டி : நாடு திரும்பிய தமிழக வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு

தெற்கு ஆசிய கபடி போட்டி : நாடு திரும்பிய தமிழக வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு

தெற்கு ஆசிய கபடி போட்டி : நாடு திரும்பிய தமிழக வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு

தெற்கு ஆசிய கபடி போட்டி : நாடு திரும்பிய தமிழக வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு

தெற்கு ஆசியா நாடுகளுக்கிடையேயான கபடி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கள் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு பெரம்பலூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு  போட்டி- 2021, பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரில் கடந்த டிசம்பர்-29, 30, 31  ஆகிய மூன்று நாட்கள்  நடைபெற்றது. இதில்  இந்திய இளையோர் விளையாட்டு கழகம் சார்பில், இந்திய அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள். 19 வயதிற்குட்பட்ட பிரிவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 7 பேரும், ஆண்கள் 7 பேரும் கலந்து கொண்டு விளையாடினர்.

பூடான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8  நாடுகளை சேர்ந்த, 8 அணி வீரர்கள் விளையாடினார்கள். இதில்  இந்திய இளையோர் விளையாட்டுக் கழகத்தின் சார்பில், இந்திய அணிக்காக விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் திறமையாக விளையாடி பெண்கள் அணி, ஆண்கள் அணி என தனித்தனி இருவரும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர். இந்நிலையில் இன்று நாடு திரும்பிய இவர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த போது பல்வேறு அமைப்புகள் சார்பில் தங்கம் வென்ற வீரர்களுக்கு, மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Also read : தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்... புதிய அறிவிப்பு வெளியாகிறது

இதுகுறித்து வெற்றி பெற்ற கபடி வீரர்கள் தெரிவிக்கும் போது, தெற்காசிய நாடுகள் அளவில் கபடி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நாங்கள் இந்திய அணிக்காக விளையாடி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக தங்கப்பதக்கம் பெற்று தந்துள்ளோம்.எங்களுடைய இந்த தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை வளர்க்கும் விதத்திலும், வீரர்களை ஊக்குவிக்கும், வகையிலும் தமிழக அரசு உரிய கௌரத்தை வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
Published by:Vijay R
First published:

Tags: Perambalur

அடுத்த செய்தி