பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்ட சாலைகளை மேம்படுத்தி அதனை அகலப்படுத்தி வருகின்றனர். இதனால் செயல்படுத்தப்பட்ட சாலை விரிவாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, சாலையோரங்களில் இருந்த புளிய மரங்கள் உட்பட பல லட்சம் மதிப்புக்கு பயன் தரும் மரங்கள் கபளீகரம் செய்யப்பட்டது.
இவ்வாறு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் கிராமச்சாலைகள் என பல்வேறு இடங்களில் இருந்த பல லட்சம் புளிய மரங்கள் நாடு முழுவதும் வெட்டப்பட்டு விட்டது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் சாலைகளில் இருந்த பல 1000 புளியமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதால் தற்போது சமையலறையில் முக்கியமானதாகவும், அறுசுவைகளில் ஒன்றாகவும் கருதப்படும் புளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதோடு, அதற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குளிர்சாதனப்பெட்டி கண்டு பிடிக்கும் முன்பே நமது முன்னோர்கள் சாதம், சாம்பார் என அனைத்து வித உணவு பொருட்களும் கெட்டு போகாமல் இருக்க புளியை பயன்படுத்தி வந்தனர். இது மட்டுமின்றி சைவ, அசைவ உணவுகளுக்கு புளி ஒரு அத்தியாவசிய பொருளாக உள்ள நிலையில் தற்பொது அந்த மரங்கள் இருந்த இடம் தெரியாமல் அதன் சுவடுகளே அழிக்கப்பட்டு விட்டதால், மனிதர்கள் மட்டுமின்றி, இந்த மரங்களை நம்பி வாழ்ந்து வந்த பறவைகள், குரங்குகள் போன்ற பல்லுயிரினங்களும் வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்கும், மாற்று இடுங்களுக்கும் புலம் பெயர்ந்து விட்டன.
இது ஒரு புறமிருக்க மனிதர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்த இந்த மரங்களுக்கு பதிலாக பெயரளவுக்கு நடவு செய்யப்படும் பயனற்ற மரங்களும் பராமறிக்கப்படால் உள்ளது. இவ்வாறு புளிய மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதால் புளிப்புச்சுவையின் தேவைக்கேற்ற புளி கிடைக்காமல் ஆண்டுக்காண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அதன் விலையும் பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது.
இதனால் பெண்கள் தங்கள் வீடுகளில் சமையல் செய்ய புளிக்கு பதிலாக எலுமிச்சை, தக்காளியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தக்காளி, எலுமிச்சையில் அதிக விளைச்சலுக்காவும், பூச்சு கட்டுப்படுத்துதலுக்காவும் ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகிறது. ஆனால் புளிய மரங்களுக்கு யாரும் மருந்து அடிப்புது இல்லை. இதனால் 100 சதவீதம் இயற்கையால் உருவாகும் புளி சாப்பிடுவதால் ஆரோக்கிய வாழ்வினை பெற இயலும் என்ற நிலை மாறி, வரும் காலங்களில் புளிப்பு சுவைக்காக ரசாயன கலவைகளை பயன்படுத்த வேண்டிய நிலை வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க... Keezhadi excavation | கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் கண்டுபிடிப்பு..
இதனை தவிற்பதற்கு மீண்டும் சாலையோரங்கள், பொதுஇடங்கள், வனப்பகுதிகளில் புளியமரங்களை பயிரிட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சாலையோரங்களில் அகற்றப்பட்ட புளியமரங்களால், கோடைக்காலங்களில் அனல் காற்றில் சிக்கி தவிக்க வேண்டிய நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டுள்ளது மட்டுமின்றி, அடிக்கடி ஏற்படும் வறட்சிக்கும் வித்திடும் நிலை ஏற்படும் என்றால் அது மிகையில்லை என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர்: ராஜவேலு, பெரம்பலூர்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Highways Department, Perambalur